‘மீனா எங்கே…? நான் பாக்கனும்…’ கணவரின் இறப்பு செய்தி கேட்டு ஓடோடி வந்த ரஜினி… !!!

Author: Babu Lakshmanan
29 June 2022, 1:34 pm

நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையில் தொற்று பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.

மீனா கணவரின் இரங்கல் செய்தியைக் கேட்ட திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர், அவரது வீட்டுக்கு நேரில் சென்றும், சமூக வலைதளங்களின் மூலமும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வித்யாசாகரின் மறைவு செய்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த நடிகர் ரஜினிகாந்த், உடனே மீனாவின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, மீனாவின் வீட்டுக்கு சென்ற ரஜினி, மீனா எங்கே..? அவரை பாக்கனும், என்று கேட்டு, அவரிடம் ஆறுதல் கூறியதாக சொல்லப்படுகிறது.

ரஜினியைத் தொடர்ந்து, நடிகர் சரத்குமார், பிரபுதேவா, குஷ்பு, மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1092

    1

    1