‘ரஜினி ரசிகர்கள் பற்றி நாட்டுக்கே தெரியுமே..’ வைரலாகும் சூப்பர்ஸ்டார் பேசிய வீடியோ..!
Author: Rajesh2 February 2023, 2:30 pm
தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை பெரிய ரசிகர் படையே உள்ளது.
80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர். 70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை.
இந்நிலையில், மேடை நிகழ்ச்சி ஒன்றில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது ரசிகர்கள் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பழைய வீடியோவான அதில் ரஜினி அவர்கள், “ரஜினி ரசிகர்கள் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே.. நாட்டுக்கே தெரியுமே..” என கூறியுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ரஜினி ரசிகர்கள் பற்றி நாட்டுக்கே தெரியுமே … pic.twitter.com/7z9fj1KKyv
— Rajinifans.com (@rajinifans) February 1, 2023