“இந்த ஆளுக்கெல்லாம் ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாம்” – ரஜினியை கலாய்த்த முதியவர்: அவரே பகிர்ந்த சம்பவம்..!

Author: Rajesh
12 February 2023, 6:30 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிஅவர்கள், 70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார்.

jailer----updatenews360

எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். தான் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார் என்கிற ஈகோ இல்லாத இவரது குணம் தான் பிரபலங்களையும், ரசிகர்களையும் பெரிதும் ஈர்த்த ஒரு பண்பு.

இந்நிலையில், ரஜினிகாந்த் பற்றி சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி.ஜி. தியாகராஜன் கூறிய விஷயம் செம வைரலாகி வருகிறது. அப்போது அவர் கூறியதாவது, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி நடித்த படத்திற்காக பொள்ளாச்சி சென்ற போது, அங்கு ஹோட்டலில் புக் செய்திருந்த அறைகளில் ரஜினியை விட சிரஞ்சீவிக்கு சிறு அறையை புக் செய்திருந்தார்களாம். ஹோட்டலுக்கு சென்றதும் தன் அறையை பார்த்த ரஜினி, உடனே சிரஞ்சீவியின் அறைக்கு சென்றிருக்கிறார்.

இது என்ன என் அறையை விட இந்த அறை சிறிதாக இருக்கிறது. நாம் அழைத்ததை மதித்து அண்டை மாநிலத்தில் நமக்காக வந்தவர்களை அவர்களின் மனம் குளிரும்படி கவனித்து அனுப்புவது தான் தமிழர்களின் பாரம்பரியம். என் அறையை சிரஞ்சீவிக்கு கொடுத்துவிடுங்கள் என்றாராம் ரஜினி. பெரிய ஸ்டாராக இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட அறையை சிரஞ்சீவிக்கு விட்டுக் கொடுக்கும் மனிதரை இந்த காலத்தில் பார்ப்பது அரிது.

அதனால் தான் அவர் என்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என தியாகராஜன் தெரிவித்துள்ளார். விட்டுக் கொடுப்பது மட்டுமல்ல தன்னை தானே கலாய்த்துக் கொள்வதும் ரஜினியால் மட்டும் தான் முடியும். எந்திரன் படத்தில் நடித்தபோது ‘நீங்க ஹீரோவா’ என தாம் சென்ற இடத்தில் ஒரு முதியவர் அதிர்ச்சி அடைந்ததை மேடையில் கூறியவர் ரஜினி. மேலும், “இந்த ஆளுக்கெல்லாம் ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாம்” என அந்த முதியவர் சொன்னதை அப்படியே மேடையில் சொல்லி ரஜினி தன்னை தானே கலாய்த்து பேசிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rajini_updatenews360.jpg 2
  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!