சசிகலா வீட்டிற்கு நேரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. அதிர்ந்து போன போயஸ் கார்டன் : நடந்தது என்ன?!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2024, 8:41 pm

சசிகலா வீட்டிற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. அதிர்ந்து போன போயஸ் கார்டன் : 30 நிமிடம் நீடித்த சந்திப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, கடந்த 2017ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார்.

அப்போது அவர் சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் தங்கியிருந்தார். பின்னர் 2020ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையானார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் நீலகிரியில் ஜெ.,வுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவிற்கு சென்ற அவர் ஜெயலலிதாவின் சிலைக்கு மாரியாதை செலுத்தி, அங்கு கட்டப்படும் நினைவித்திற்க அடிக்கல் நாட்டினார்.

இதனிடையே சென்னை போயஸ் கார்டனில் வேதா இல்லத்திற்கு எதிரே சசிகலா வீடு கட்ட துவங்கினார். வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்ட நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்தது முதல் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் வசித்து வந்தார்.

அதற்காகவே அவர் புதிய வீடு போயஸ் கார்டனில் வேதா இல்லம் எதிரே கட்ட வேண்டும் என்று திட்டமிட்டடிருந்தார். அதன்படி இல்லத்தை கட்டி ஜெயலலிதா இல்லம் என பெயரிட்டார்.

இதன் கிரஹப்பிரதேவசம் கடந்த மாதம் நடந்தது. நெருக்கமான உறவினர்கள் மட்டுமே சென்றிருந்தனர். கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து போயஸ் கார்டனில் சசிகலா குடிபுகுந்துள்ளார்.

ஜெயலலிதா பிறந்தநாளான இன்று அந்த இல்லத்திற்கு குடியேறினார். கிரகப் பிரவேசத்திற்காக போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிக்கு சசிகலா அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் அவர் பங்கேற்க முடியாததால், இன்று சசிகலா வீட்டிற்கு சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!