அந்த நபருடன் தங்க வேண்டாம்: மகளை கூப்பிட்டு எச்சரித்த ரஜினிகாந்த்..!

Author: Rajesh
19 February 2023, 5:00 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து, மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி நடிக்கவுள்ளார்.

lal-salaam - updatenews360

2006ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர், ஐஸ்வர்யா மூன்று படங்களை இயக்கினார். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

தற்போது மீண்டும் திரைப்படங்களை இயக்கும் பணியில் இறங்கியுள்ள ஐஸ்வர்யா, லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், பாட்டு பாடுவதில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா, லால் சலாம் படத்தில் சில பாடலை இவரே பாட முடிவு செய்துள்ளார். இதனால், ஷூட்டிங் முடிந்தவுடன் அனிருத் ஸ்டூடியோவுக்கு சென்று அங்கேயே தங்கிவிடுகிறாராம்.

இதனை அறிந்த ரஜினிகாந்த், ஐஸ்வர்யாவை கூப்பிட்டு அங்கு சென்று தங்க வேண்டாம் என்று கண்டித்துள்ளார். ஐஸ்வர்யா அனிருத்தின் நெருங்கிய உறவினர் என்றாலும் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்கள் வந்துவிட கூடாது என ரஜினிகாந்த் இவ்வாறு கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!