செஸ் எனக்கு பிடித்தமான விளையாட்டு… கடவுள் ஆசிர்வதிக்கட்டும் ; செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு ரஜினி வாழ்த்து

Author: Babu Lakshmanan
28 July 2022, 12:15 pm

சென்னை : செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில், 187 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவரையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையை கொண்டதாகும்.

6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இந்த போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அணியை இந்தியா களமிறக்குகிறது.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “செஸ் நான் மிகவும் விரும்பும் உள்ளரங்க விளையாட்டு. செஸ் வீரர்கள் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார். அதோடு, அவர் செஸ் விளையாடும் பழைய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!