சின்ன பொண்ணு… இந்த பொண்ணு கூட எப்படி? பரவால்ல மீனா தான் வேணும் – அடம்பிடித்த நடிகர்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். அண்மையில் கூட மீனா 40 ஆண்டு கால சினிமா பயணம் குறித்து நடைபெற்ற கௌரவ விழாவில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு அவரை வாழ்த்தினார்கள்.

இந்நிலையில், பிரபல நடிகர் ராஜ்கிரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் மீனா குறித்து பேசியுள்ளார். அதில், இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991 -ம் ஆண்டு வெளியான “என் ராசாவின் மனசிலே” படத்தில் ராஜ் கிரணுக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். அப்போது மீனாவின் வயது 15 தான்.

என் ராசாவின் மனசிலே படத்திற்கு கதாநாயகி தேடிட்டு இருந்தபோது ஒரு வார பத்திரிக்கையில், மீனாவோட போட்டோவை பார்த்தோம். அத பாத்துட்டு இந்த பொண்ணு படத்துக்கு கதாநாயகிய பொருத்தமாக இருப்பாங்களான்னு கஸ்தூரிராஜா கிட்ட சொன்னேன். அந்த பொண்ணு யாரு என்னன்னு விசாரிச்சுட்டு போய் பேசுங்க அப்படின்னு சொன்னதும், கஸ்தூரிராஜா என்ன சார் ரொம்ப சின்ன பொண்ணா இருக்காங்க… இந்த பொண்ணு எப்படி சார் அப்படின்னு கேட்டார். அந்த சோலையம்மா கதாபாத்திரத்தில் அந்த பயந்த சுபாவம் அதுக்கு மீனாதான் பொருத்தமா இருப்பாங்க நீங்க மீனா கிட்ட பேசுங்க… அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டேன். அந்த படத்துல சோலையம்மாவா மீனா வாழ்ந்ததினால் தான் அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

மேலும், அந்த படத்தின் படப்பிடிப்பின் போது மீனா ஆடை மாற்றவேண்டும் என இயக்குனர் கூற நடு ரோட்டிலே காரை ஓரமாக நிப்பாட்டிவிட்டு ஆடை மாத்திட்டு வந்து டிச்சு கொடுத்தாங்க, அப்போது இந்த கேரவன் வசதியெல்லாம் கிடையாது என ராஜ் கிரண் கூறினார்.

Poorni

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

22 hours ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

24 hours ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

24 hours ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

1 day ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

1 day ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

1 day ago

This website uses cookies.