ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பாகுபலியின் வெற்றிக்கு பிறகு, ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ராமராஜு, பீம் ஆகியோர் வாழ்க்கை கதையை முழுக்க முழுக்க கற்பனை கலந்து எடுக்கப்பட்ட திரைப்படமாக உருவாகியுள்ளது.
உலகம் முழுவதும் 2 நாட்களில் ரூ.340 கோடியை தாண்டி வசூலை குவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பாகுபலி படத்தை விட இப்படம் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் வெற்றியை தொடர்ந்து..ராம் சரண் தனது 38 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதால், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராம்சரணின் பிறந்தநாள் விழாவினை கொண்டாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார். படக்குழுவினருக்கும், ராம்சரணுக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.