ஊர்வசியை மிரட்டிய ரஜினி.. சூப்பர் ஸ்டார் இப்படியும் யோசிப்பாரா?..
Author: Vignesh27 June 2024, 3:17 pm
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கிய ஊர்வசி இன்னும் அனைத்து மொழிகளிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் பிசியாக நடித்த வருகிறார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும், ஒரு சில திரைப்படங்கள் இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும். அந்த வகையில், பலருடைய பாராட்டைப் பெற்ற திரைப்படம் முத்து.
இந்த திரைப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் மலையாளத்தில் மோகன்களால் நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் ரீமேக் ஆக தான் முத்து திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார்தான் இயக்கியிருப்பார். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகை ஊர்வசி ராதாரவியின் மகள் பத்மினி கேரக்டர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அவரை ரஜினிகாந்த் நடிக்க வைக்க கூடாது என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம்.
இது குறித்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரமேஷ் கண்ணா முத்து திரைப்படத்தில் நடிகர் ராதாரவியின் மகள் பத்மினி கேரக்டர் ஊர்வசி தான் நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது தொடர்பாக ரஜினிகாந்த் ஊர்வசிக்கு போன் செய்து இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார். அதற்கு காரணம் ஊர்வசி இப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். அவரை இப்படி துணை கேரக்டரில் நடித்து வைப்பது சரியில்லை.
படத்தில், பத்மினி கேரக்டர் அவ்வளவு முக்கியம் உள்ளதாக இல்லை. எனவே, இந்த படத்தில் கூடாது என்று கறாராக ரஜினிகாந்த் கூறிவிட்டாராம். அதனால், தான் ஊர்வசிக்கு பதிலாக நடிகை சுபாஸ்ரீயை அதே கேரக்டரில் நடிக்க வைத்தோம் என்று அந்த பேட்டியில் ரமேஷ் கண்ணா பேசி இருக்கிறார்.