உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.
சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எல்லா விமர்சனத்திலும் லியோ படத்திற்கான ரேட்டிங் கொஞ்சம் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வசூல் வேட்டையில் படத்திற்கு எந்த குறைச்சலும் இல்லை.
உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியான லியோ, முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை எந்த நடிகைக்கும் லிப்லாக் கொடுக்காமல் இருந்த நடிகர் விஜய், நடிகை திரிஷாவுக்கு அழுத்தமான ஒரு லிப்லாக் கொடுத்து நடித்திருக்கிறார். ஆனால், அந்த காட்சியில் எமோஷ்னலான உணர்ச்சி என்ற ஒரே காரணத்தால் தான் விஜய்யும் திரிஷாவும் அதற்கு நடிக்க ஓகே சொன்னதாகவும் லோகேஷ் தெரிவித்திருந்தார்.
திரிஷாவும் தன் அன்பின் வெளிபாடாக தான் அந்த முத்தத்தை கொடுத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், திரிஷாவுக்கு முத்தம் கொடுக்கவே பிரபல நடிகர் மறுத்திருக்கிறார்.
இந்த நிலையில், பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் 2018 இல் வெளியான திரைப்படம் 96. இப்படத்தில் ராமச்சந்திரன், ஜானகி இருவரின் பள்ளி பருவ காதல், 22 வருடங்கள் ஆகியும் அப்படியே இருக்கிறது. பல வருடங்கள் கழித்து சந்திக்கும் போது இவர்களின் காதல் ஞாபகங்கள் அவர்களை என்ன செய்கிறது என்பதே இப்படத்தின் கதை.
இப்படத்தில் விஜய் சேதுபதி ராமச்சந்திரன் ஆக வாழ்ந்து வந்தார். அந்த படத்தினை அவ்வளவு சிறப்பாக எடுத்து இருந்தார் இயக்குனர். இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவை லிப் லாக் காட்சியில் நடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார் இயக்குனர், த்ரிஷா ஓகே சொல்லிட்டாங்க.
ஆனால் இது நல்ல ஒரு காதல் கதையாக உள்ளது. இதுபோன்ற காட்சிகளை வைத்து இளைஞர்களை கெடுத்துவிட வேண்டாம் என விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விஜய் சேதுபதி சொன்னதற்கு மறுப்பு தெரிவிக்காமல் திரிஷாவும் ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் 96 படத்தில் லிப் லாக் காட்சி இடம் பெறவில்லை.
இந்நிலையில், நெட்டிசன்கள் பலரும் விஜய் சேதுபதி இருக்கிற தைரியம் விஜய் இல்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.