‘அந்த’ வீடியோக்களை வெளியிட்ட நடிகர்.. நல்லா இருந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஷாக் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan12 April 2025, 6:13 pm
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்த ஸ்ரீ நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இதையும் படியுங்க: பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்
இந்த நிலையில் ஆள் அடையாளம் தெரியாதது போல மாறியுள்ளார். எலும்பும், தோலுமாக மாறி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல், ஆபாச வீடியோக்களை தனது இன்ஸ்டா கணக்கில் பதிவிட்டு வருகிறார். நல்ல இருந்த மனுஷனுக்கு என்ன ஆச்சு என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
உண்மையில் இது ஸ்ரீதானா? இல்லை படத்துக்காக உடலை குறைத்துள்ளாரா? என பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இணையத்தில் ஸ்ரீயின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.