இது திருப்பி கொடுக்கும் நேரம்.. வடிவேலுவை பழி தீர்த்த காதல் பட நடிகர்!!!

Author: Vignesh
12 August 2023, 1:15 pm

2004 -ம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் படத்தின் மூலம் சுகுமார் பிரபலமானார். சுகுமார் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் காமெடி நடிகராக இவரால் ஜொலிக்க முடியவில்லை. இவர் நடிப்பை தாண்டி 2 படங்களை இயக்கி உள்ளார்.

kadhal film sugumar -updatenews360

இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தது குறிப்பித்தக்கது. இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் சினிமாவில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.

அதிலும், குறிப்பாக தனக்கு வடிவேலு செய்த மோசமான காரியத்தை பகிர்ந்துள்ளார். தன்னை சந்தித்து பாராட்டியும் தன்னை ஆள் வைத்து அடித்தும் ஓட விட்டவர் வடிவேலு என்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

vadivelu kadhal sugumar-updatenews360

மேலும், வடிவேலுவை சந்தித்தபோது பழிதீர்த்ததாகவும், தெரிவித்துள்ளார். ஏவிஎம் தியேட்டரில் சிங்கம் களம் இறங்கிடுச்சு என்ற காட்சியில் வடிவேலு நடித்திருந்ததாகவும், அப்போது என்னை தாண்டி சென்றபோது எல்லோரும் வடிவேலுவை பார்த்து எந்திரிச்சாங்க நான் மட்டும் கால் மேல் கால் போட்டு வடிவேலுவை பார்த்தேன். என்னைப் பார்த்த உடனே அவர் அப்படியே அந்த பக்கம் சென்று விட்டார். அந்த நாலு பட போஸ்டர்லையும் என் போட்டோ இருந்துச்சு என்று காதல் சுகுமார் தெரிவித்துள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?