தலைக்கேறிய போதையில் SK பட வில்லன்..பொளந்து கட்டிய மர்ம நபர்..தீவிர விசாரணையில் போலீஸார்.!

Author: Selvan
8 February 2025, 7:05 pm

பாரில் நடனம் ஆடுவதில் போட்டி

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சீமராஜா திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் ரிஷிகாந்த்.இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்க: ‘விடாமுயற்சி’ படம் இல்லை..கார் ரேஸ் தளம்..படக்குழுவை தாக்கிய பிரபலம்..ரசிகர்கள் ஆவேசம்.!

இவர் நேற்று சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் பாரில் இரவு மது அருந்த சென்றுள்ளார்.அப்போது பாரில் இசைக்கு நடமானடி கொண்டிருந்த இளைஞர் ஹரிஷ் என்பவரை பார்த்து,ரிஷிகாந்த் கிண்டல் அடித்ததாக கூறப்படுகிறது,அதன் பிறகு இருவருக்கும் நடனமாடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

Rishikanth bar fight Chennai

இதனால் பாரிலே வாக்குவாதம் ஏற்பட்டு,ஒருவரையொருவர் தாக்கும் நிலைமைக்கு சென்ற போது அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை வெளியே அனுப்பி பிரச்னையை சரி செய்தனர்.

அதன் பிறகு ரிஷிகாந்த் காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில்,அவரை பின் தொடர்ந்த ஹரிஷ் அவரது காரை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் நடிகர் ரிஷிகாந்த்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது.உடனே இந்த சம்பவத்தை ரிஷிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இளைஞர் ஹரிஷை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • Naga Chaitanya emotional interview என்னை ஏன் குற்றவாளியா பார்க்கிறீங்க…ரசிகர்களுக்கு நடிகர் நாக சைதன்யா கேள்வி..!
  • Leave a Reply