அந்த பொண்ணு யாருன்னே தெரியல… அந்தர் பல்டி அடித்த ரியாஸ் கான் – சந்தேகத்தை கிளப்பும் பாலியல் புகார்!

கோலிவுட்டின் சினிமாவின் பிரபலமான வில்லன் நடிகரான ரியாஸ் கான் தமிழ் படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலம் ஆனார். பிரசாந்தின் வின்னர் திரைப்படத்தில் கட்டத்துரைதேவர் என்ற ரோலில் நடித்த இவர் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகர் ரியாஸ் கான்:

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பலமொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் சுறா, ஆதவன், திருப்பதி, கஜினி , வின்னர், பாபா உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார் . இதனிடையே பழம்பெரும் நடிகையான கமலா காமேஷின் மகளான உமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு “ஷாரிக்” என்கிற ஒரு மகன் இருக்கிறார். கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி போட்டியாளராக ஷாரிக் பங்கேற்றார். அண்மையில் தான் மகன் ஷாரிக்கிற்கு நீண்ட நாள் காதலியுடன் திருமணம் நடைபெற்றது.

பாலியல் புகார்:

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால். மலையாள சினிமாவில் பிரபல இளம் நடிகையாக இருந்து வரும் நடிகை ரேவதி சம்பத் ரியாஸ்கான் மீது பாலியல் புகார் தெரிவித்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார். அதாவது “நடிகர் ரியாஸ்கான் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார். மேலும் போனில் தப்பு தப்பாக பேசி தொடர்ந்து பாலியல் டார்ச்சர் கொடுத்து வருகிறார்.

அத்துடன்… என்னுடன் உடலுறவுக்கு சம்மதிக்கும் உனது தோழிகள் யாராவது இருந்தால் சொல்லு என்றும் ரியாஸ் கான் தன்னிடம் கேட்டதாக ரேவதி சம்பத் கூறி இருக்கிறார். இந்த விஷயம் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து தற்போது நடிகர் ரியாஸ்கான் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரியாஸ் கான்… அந்த பெண் யார் என்று எனக்கு தெரியவில்லை. இது எப்போது நடந்தது எங்கு நடந்தது என்ற விவரம் கூட எனக்கு தெரியவில்லை. கடந்த 36 வருஷமாக நான் இந்த சினிமா துறையில் இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்.

ரியாஸ் கான் மறுப்பு:

இதுவரை யாரும் என்னை பற்றி இதுபோல் ஒரு புகாரை கூறியதே கிடையாது. அந்த பெண் நான் போனில் பேசியதாக சொல்கிறார். அது நான்தான் என்று எப்படி அந்த பெண்ணுக்கு தெரியும்? நான் வீடியோ காலில் பேசியிருந்தால் அது நான்தான் என்று சொல்லலாம். குடும்பத்தினர் மட்டுமல்லாமல் சினிமாவை சேர்ந்த அனைவருக்குமே என்னைப் பற்றியும் என்னுடைய கேரக்டர் பற்றியும் நன்றாகவே தெரியும்.

ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டுக்கு அவர் நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும். மேலும் இது போன்ற தேவையில்லாத கேள்விகளுக்கும் புகார்களுக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இது குறித்து விசாரணை குழு விசாரணைக்கு என்னை அழைத்தால் நான் நிச்சயம் சென்று விளக்கம் கொடுக்க தயாராக இருக்கிறேன் என ரியாஸ் தான் அந்த பேட்டி கூறி இருக்கிறார். இவரின் இந்த பதில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு சந்தேகத்தை கிளப்புகிறது. ஒரு வேலை அந்த நடிகை பிரபலமாக வேண்டும் என்பதற்காக இப்படி கூறுகிறாரோ? என சந்தேகமும் எழுந்துள்ளது.

Anitha

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

5 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

5 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

6 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

7 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

7 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

7 hours ago

This website uses cookies.