கட்டுமஸ்தான உடல் தோற்றத்துடன் பெரும்பாலான தமிழ் படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலம் ஆனவர் தான் நடிகர் ரியாஸ். இவர் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பலமொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் சுறா, ஆதவன், திருப்பதி, கஜினி , வின்னர், பாபா உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார் . இதனிடையே பழம்பெரும் நடிகையான கமலா காமேஷின் மகளான உமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு “ஷாரிக்” என்கிற ஒரு மகன் இருக்கிறார். கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி போட்டியாளராக ஷாரிக் பங்கேற்றார். கிட்டத்தட்ட 49 நாட்கள் அந்த வீட்டில் இருந்த ஷாரிக்அதன் பின்னர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வந்த மகன் ஷாரிக்கிற்கு தற்போது 29 வயது ஆகிறது.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி இவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருந்தாலும் ஷார்க்கிற்கு மனைவியாக போகும் அந்த பெண் யார் என்பது தெரியவில்லை. தற்போது ஏன் இந்த திடீர் திருமணம்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஷாரிக் யாரேனும் பெண்ணை காதல் செய்து வந்ததால் இந்த அவசர திருமணம் நடைபெறுகிறதா? என ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர். விரைவில் இதுகுறித்த ஆக்கபூர்வ தகவல் வெளியாகலாம்.