சிவகார்த்திகேயன், சந்தானம் எனக்கு போட்டியா..? நான் அப்பவே அப்படி… பிரபல நடிகர் கலாய் பேட்டி..!

Author: Vignesh
30 January 2023, 4:30 pm

ஆர் ஜே-வாக தனது கெரியரை தொடங்கி ஆர்ஜே பாலாஜி தற்போது இயக்குனர், நடிகர் என பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் ஆர்ஜே பாலாஜி இயக்கிய LKG, மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலை வாரி குவித்தது.

கடந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷம் திரைப்படமும் அதிக அளவில் ரீச்சானது. தற்போது ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ரன் பேபி ரன் திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்து வருகிறார்.

rj balaji - updatenews360

அது போக முக்கிய வேடங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், ஸ்ம்ருதி வெங்கட், பகவதி பெருமாள், ஆர்.ஜே.பாலாஜி, ஹரீஷ் பேரடி, மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

rj balaji - updatenews360

சமீபத்தில் ரன் பேபி ரன் படம் குறித்து ஆர் ஜே பாலாஜி பேசியுள்ளார். அதாவது ஆர்.ஜே.பாலாஜி கூறியதாவது, தான் இதற்கு முன் நடித்த இரண்டு படங்களும் வேறு வேறு கதைக்களம் என்றும், குறிப்பாக LKG அரசியல் படம், மூக்குத்தி அம்மன் ஆன்மிகம் திரைப்படம் என்றும், வீட்ல விசேஷம் குடும்ப படம் என வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறேன் என தெரிவித்தார்.

rj balaji - updatenews360

ரன் பேபி ரன் திரைப்படம் திரில்லர் கதைக்களத்தை கொண்டது என்றும், ஒரு இமேஜுக்குள் அடங்கிவிட கூடாது என்பதற்காகவும், இப்பொழுது ரசிகர்கள் எல்லாரும் திரில்லர் படத்தையே விரும்புகிறார்கள் எனவும், இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றும், மேலும் தான் சிவகார்த்திகேயன், சந்தானம் உள்ளிட்ட நடிகர்களுடன் போட்டி போடுகிறேன் என்று கூறி வருகிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது என்றும், தான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

rj balaji - updatenews360

மேலும் தான் நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் எனவும், தன்னுடைய சினிமா பயணம் நீண்ட தூரம் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பதாகவும், அதுமட்டுமின்றி LKG மற்றும் மூக்குத்தி அம்மன் படங்களின் 2 பாகம் கூடிய விரைவில் எடுக்க இருப்பதாகவும், தற்போது சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து வருவதாகவும், இதை தொடர்ந்து தனக்கு மைக்கேல் மதன காமராஜன் மாதிரி ஒரு படத்தில் நடிக்க ஆசை உள்ளது என்று ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 619

    1

    0