இதை பண்ணலன்னா செத்து இருப்பேன்.. ரோபோ சங்கரை அடித்து திருத்திய மனைவி..!
Author: Vignesh15 June 2023, 12:59 pm
சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ரோபோ சங்கர் மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார். மனைவியோடு சேர்ந்து தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார்.
ரோபோ சங்கர் ஆரம்பகாலத்தில் பல ஆண் அழகன் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று இருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் பிரபலத்தையும் கொடுத்தது, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து பலருடைய குரலில் பேசி அனைவரையும் வியக்க வைத்திருந்தார்.
அந்த பேட்டியில் பேசுகையில் ரோபோ ஷங்கரின் மனைவி மஞ்சகாமாலை அவருக்கு இருந்தது, ரத்தத்தில் கலந்து விட்டதால் தான் பெரும் பிரச்சினை ஆகிவிட்டதாகவும், அதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதாக தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவர்களின் அறிவுரையின்படி நடந்து கொண்டதால் மட்டுமே இந்த நோய் தீவிரமாக குணமடைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், அவர் பத்திய முறையில் உணவு எடுத்துக்கொள்ள மிகவும் தயங்கியதாகவும் நன்றாக இல்லை பிடிக்கவில்லை என்று கூறியதால் அவரை வற்புறுத்தியும் அடித்தும் உணவு கொடுக்க கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்த அறிவுரையின் படி அன்பால் மட்டுமே அவரை குணப்படுத்தியதாக ரோபோ சங்கரின் மனைவி பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
மேலும், ரோபோ சங்கர் பேசுகையில், தன்னை ஒரு குழந்தை போல் மனைவி பார்த்துக் கொண்டதாகவும் மனைவி இல்லை என்றால் தான் இந்த நேரத்தில் இறந்திருப்பேன் என்றும் தெரிவித்து இருந்தார்.