நடிகர் சக்தி தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் கூட தன்னுடைய திறமையால் தனக்கான தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆம் பிரபல இயக்குனர் ஆன பி வாசுவின் மகனான சக்தி குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக அப்பா வாசுவின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 1991 ஆம் ஆண்டில் சின்னதம்பி திரைப்படத்தில் இளைய வயது பிரபுவாக நடித்திருப்பார் நடிகர் சக்தி. குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த முதல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்து தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் துணை வேடம் ஏற்று நடித்துள்ளார். மேலும் கோ , யுவன் யுவதி உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டும் நடித்த சக்திக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.
சில காலம் சினிமாவில் வராமல் இருந்த இவர் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி மிக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் வெறுப்பையும் அவப்பெயரையும் சம்பாதித்து வெளியேறினார் . தான் செய்த மிகப்பெரிய தவறு குறித்து மிகுந்த வேதனையோடு பேசி இருக்கிறார் சக்தி. அதாவது நான் பிக் பாஸுக்கு சென்றது தான் என் வாழ்க்கையில் நான் செய்த முதல் மிகப்பெரிய தவறு.
ஆம் நான் அந்த நிகழ்ச்சிக்கு ஆழம் தெரியாமல் கால் வைத்து விட்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை. அதனால் தான் அது எனக்கு சரிவர அமையவில்லை. நான் எடுத்த மிகப்பெரிய தவறான முடிவது சின்ன வயசுல இருந்தே நான் தோல்வியை பார்த்ததே இல்லை .
கொஞ்சம் வசதியான வீட்டுப் பையனாகவே வளர்ந்ததால் எதிலும் நாம் ஃபெயிலானது கிடையாது. நன்றாக எம்பிஏ வரை படித்து 30 வருடம் சந்தோஷமான வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தேன். ஆனால், கடந்த எட்டு ஆண்டுகள் அப்படியே என்னுடைய வாழ்க்கை புரட்டிப் போட்டு விட்டது.
மனிதர்கள் மூன்று காரணங்களுக்காக குடிக்கிறார்கள். பண திமிரில் குடிக்கிறார்கள், வேலைக்கு பளு காரணமாக களைப்பு தெரியாமல் இருக்க குடிக்கிறார்கள். மன உளைச்சலுக்காக குடிக்கிறார்கள். பணத்திமரில் குடிப்பவன் மறுநாள் அதை மறந்து விடுவான், வேலை பளு காரணமாக குடிப்பவன் சந்தோஷமாக ஒரு நாள் குடித்துவிட்டு மறுநாள் வேளைக்கு செல்கிறான்.
ஆனால் மன உளைச்சலால் குடிப்பவனால் அதை நிறுத்துவது கடினம். கடைசிவரை அவன் குடிபோதைக்கு அடிமையாகி வாழ்க்கையை நாசமாக்கிக்கொள்கிறான். நான் பண திமிரில் குடிக்கவில்லை. என்னுடைய சந்தர்ப்பம் சூழ்நிலை என்னுடைய பிரச்சனை என்னால் தாங்க முடியாத அளவுக்கு இருந்ததால் குடித்தேன்.
அது என்ன பிரச்சனை என்று கடவுளுக்கும் என் குடும்பத்தாருக்கும் தெரியும். பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு மோசமான அனுபவமாக பெரும் அவப்பெயரை சம்பாதித்து கொடுத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இரண்டு ஆண்டுகளாக நான் வீட்டிலேயே முடங்கி விட்டேன். அந்த சமயத்தில் ரஜினி சார் என்னை பற்றி அப்பாவிடம் விசாரித்து என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்.
ரஜினி சார் சொன்னார்….எல்லோருடைய வாழ்க்கையிலும் இந்த மாதிரியான சறுக்கல்கள் நடந்திருக்கிறது. எல்லா நடிகர்களின் வாழ்க்கையிலும் இது நடந்திருக்கிறது. என் வாழ்க்கையிலும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படியுங்கள்: என் மகனுக்கு ஒன்னு… ஊரான் மகனுக்கு? கேள்வி கேட்ட கோபியை அசரவைத்த அரவிந்த் சுவாமி!
அது எல்லாம் கடந்துதான் நான் இந்த இடத்தில் வந்திருக்கிறேன். நீயும் திரும்ப வருவ உடனே வீட்டுக்கு வா என்று கூறினார். அவர் என்னை அழைத்துப் பேச வேண்டிய அவசியமே இல்லை. அவர் ஆறுதலாக பேசிய வார்த்தைகள் காயம் வடுக்களை ஆற்றியது. நான் அவரிடம்.. நான் கமல் சாரின் ரசிகர் ஆனால் உங்கள் வீட்டுப் பிள்ளை எனக் கூறினேன் என்று எமோஷனலாக சக்தி அந்த பேட்டியில் கூறினார்.
0
0