நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் துணிவு படத்தில் இணைந்துள்ளது. இது அஜித்தின் 61வது படமாகும். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் கடந்த 11ம் தேதி அதிகாலை 1 மணி முதலே திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையில் வெளியான 3 பாடல்களும் ஹிட் அடித்தது. ஆக்சன் ஃபார்முலாவில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது.
என்னதான் துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசு படமும் வெளியானாலும் துணிவு படத்தின் வசூல் அமோகமாகவே இருந்து வருகின்றது. இதையடுத்து அஜித் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். AK62 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தகவல் வருகின்றன. இந்நிலையில் இப்படத்தில் அஜித் சற்று வித்யாசமாக நடிக்கப்போவதாகவும், AK62 திரைப்படம் ஒரு பீல் குட் படமாக இருக்கும் என்றும் பேசப்பட்டு வருகின்றது. சமீபகாலமாக அஜித் சீரியசான படங்களிலே நடித்து வருவதால் AK62 அஜித் ரசிகர்களுக்கு சற்று மாறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சந்தானம் கமிட்டாகியுள்ளாராம். தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் சந்தானம் அஜித்திற்காக கேரக்டர் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயம் இப்படத்திற்காக சந்தானம் 60 நாள் கால் ஷீட் கொடுத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக சந்தானம் டபுள் மடங்கு சம்பளம் கேட்டதாக தகவல்கள் வருகின்றன. அஜித் கேட்டதற்காக கேரக்டர் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்ட சந்தானத்திற்கு கேட்ட சம்பளத்தை தர தயாரிப்பு நிறுவனமும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…
This website uses cookies.