அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாப் போச்சு : சந்தானம் எடுத்த திடீர் முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan4 December 2024, 6:39 pm
நடிகர் சந்தானம், காமெடியனாக இருந்து கதாநாயகனாக வளர்ச்சி பெற்று ஓரளவுக்கு முன்னேறினார். ஆனால் காமெடியனாக இருந்த போது கிடைத்த அந்தஸ்து நடிகராக மாறிய பின் கிடைக்கவில்லை.
பேயை வைத்து “டிடி ரிட்டர்ன்ஸ்” மற்றும் “வடக்குப்பட்டி ராமசாமி” திரைப்படங்கள் மட்டும் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து, சந்தானம் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குநர் அவதாரம் எடுக்கும் சந்தானம்
அவருடைய திரைப்படங்களை அடுத்தடுத்து வரிசை கட்டி வெளியாகும். இதில் ஒரு படம் வெற்றியடைவதற்குள், நான்கு படங்கள் தோல்வியடைகின்றன.
இதையும் படியுங்க: நான் அவங்கள மாதிரி கேங் இல்ல.. காஜல் அகர்வாலை சங்கடத்தில் ஆழ்த்திய பிரபல நடிகை!
இதனால், சந்தானம் கதாநாயகனாக நடித்ததால் சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம் என கூறப்படுகிறது. ஏனெனில், அவர் ஹீரோவாக நடித்த படங்களில் பெரும்பாலானவற்றை அவரே தயாரித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது சந்தானம் இயக்குநராக மாறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்ததாக நடிக்கவுள்ள ஒரு படத்தை முடித்த பிறகு, தானே இயக்கி ஒரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டு வருகிறார்.