சூப்பர் ஸ்டார் பெருசா.. சுப்ரீம் ஸ்டார் பெருசா…? எதையாவது பேசீட்டு இருக்காதீங்க : கோபத்தில் கொந்தளித்த சரத்குமார்!!

Author: Babu Lakshmanan
16 January 2023, 7:38 pm

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த செய்தியாளர்களிடன் கேள்விக்கு நடிகர் சரத்குமார் கோபமாக பதிலளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யின் வாரிசு படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் குடும்ப பார்வையாளர்களின் ஆதரவால் பாக்ஸ் ஆஃபிசில் நல்ல வசூலை பெற்றுவருகிறது. தமிழ்நாடு அளவில் முதல் நாளில் பாக்ஸ் ஆஃபிஸில் துணிவு படம் முதல் இடத்தில் இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் வாரிசு முதலிடத்தை தக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இன்று சென்னையில் வாரிசு பட வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி, சரத்குமார், ஷாம், விடிவி கணேஷ், சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த சரத்குமாரிடம் சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினர். இதனையடுத்து அவர், ”என் பையனுக்கு நான் தான் சூப்பர் ஸ்டார். எனக்கு எங்க அப்பா சூப்பர் ஸ்டார். அடுத்த முதல்வர் ஆவார் என்றோ, பிரதமர் ஆவார் என்றோ சொல்லவில்லை. இதனை பிரச்னையாக்காதீர்கள்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஒரு பத்திரிகையாளர், ரஜினிகாந்த் இருக்கும்போது எப்படி விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொல்லலாம் என கேள்வி எழுப்பினார். அதற்கு கோபத்தில் பதிலளித்த சரத்குமார், ”நான் சுப்ரீம் ஸ்டார். சூப்பர் ஸ்டார் பெருசா, சுப்ரீம் ஸ்டார் பெருசா, அல்டிமேட் ஸ்டார் பெருசா, மெகா ஸ்டார் பெருசா. எனவே இதனை பிரச்னையாக்காதீர்கள் என்றார். மீண்டும், சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்தை மற்றவர்களுக்கு சொல்லலாமா என கேள்வி எழுப்ப, அதற்கு அவர், நான் சந்தோஷப்படுவேன் சார். விஜய் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என சொல்லவில்லை. அறிவுள்ளவன் நான். படித்தவன்”. என ஆக்ரோஷமாக பேசினார்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?