திடீர் உடல் நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் நண்பன்..!

Author: Vignesh
30 March 2023, 6:08 pm

1973-ம் ஆண்டு தெலுங்கில் ராம ராஜ்ஜியம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக சரத்பாபு தனது பயணத்தை தொடங்கியவர். பின்னர் 1977ம் ஆண்டு தமிழில் பட்டிய பிரவேசம் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பிறகு சரத்பாபு ஹீரோவாக பல படங்கள் நடித்தாலும் சரியாக ஹிட் கொடுக்கவில்லை என்பதால், இரண்டாவது நாயகனாக நடித்து வந்தார்.

sarathbabu-updatenews360

ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள சரத்பாபு சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். 71 வயதாகும் சரத்பாபு சினிமாவில் நடிப்பதை விட்டு ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் ஓய்வில் எடுத்து இருந்தார்.

திடீரென உடற்நலக் குறைவு ஏற்பட தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அவரது உடல்நிலை குறித்து சரியாக தகவல் எதுவும் தற்போது வரை வரவில்லை.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?