அந்த படத்துக்காக கெட்டு போனதை சாப்பிட்டேன்… பிரபல நடிகர் உருக்கம்..!

Author: Vignesh
23 February 2023, 7:07 pm

தமிழ் சினிமாவில் சரத்குமார் முன்னணி நடிகராக இருக்கிறார். சூரியவம்சம் படத்தில் நடித்த போது தான் சந்தித்த சவால்களை பற்றி, அவர் ஒரு பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார்.

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவின், சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படுபவர். சூர்யவம்சம் படத்தில் நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடித்து இருப்பார்.

இந்த படத்தில் நடித்த போது தான் சந்தித்த சவால்கள் குறித்து, சரத்குமார் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது படத்தில், இடைவேளைக்கு முன்பு சரத்குமாரின் தங்கை கல்யாணத்தில் சின்ராசுக்கு தேவயானி பல பணிவிடைகள் செய்து இருப்பார்.

சின்ராசு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு தனியாக உட்கார்ந்து சாப்பிடும் போது, அவர் அருகில் வந்து பரிமாறுவார். இந்த சீன் குறித்து பேசிய சரத்குமார், அந்த காட்சி எடுக்கும் போது கிட்டத்தட்ட இரவு நேரம் வந்துவிட்டதால், காலையில் வாங்கி வைத்த சாப்பாடு நான் சாப்பிடும் நேரத்தில் கெட்டுப் போய்விட்டது என்று தெரிவித்துள்ளார்.

sarathkumar-updatenews360

ஒரு வாய் வைத்ததுமே எனக்கு வாந்தியே வந்துவிட்டது எனவும், ஆனால் அதை சமாளித்து என்னால் சீன் கெட்டு விடக் கூடாது என்பதற்காக, பல்லை கடித்து கொண்டு அதை சாப்பிட்டேன் என உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.

பின்பு அந்த காட்சி முடிந்ததும் விக்ரமன் தன்னை அழைத்து, சாப்பிடும் போது உங்க முகம் சரியில்லையே, ஏன் என கேட்டார். அதன் பிறகு தான் சாப்பாடு கெட்டுப் போன விஷயத்தை அவரிடம் கூறியதாக சரத்குமார் தெரிவித்தார்.

sarathkumar - updatenews360

இதனை கேட்ட அவர் ஷாக் ஆகி உடனே படக்குழுவை கூப்பிட்டு கண்டுபடி திட்டினார். விடுங்க இதெல்லாம் படத்துக்காக தானே என அவரைத் தேற்றினேன் என சூர்யவம்சம் படத்துக்காக தான் பட்ட கஷ்டங்களில் இது ஒரு பாதி தான் என்பதை உருக்கமாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ