KS ரவிக்குமாரால் தூக்கத்தை இழந்த பிரபல நடிகர் .. முடி கொட்டுனதுக்கு இதுதான் காரணமாம்..!
Author: Vignesh18 May 2024, 4:41 pm
தமிழ் சினிமாவில் காமெடி, காதல், சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்தையும் ஒரே திரைக்கதையில் அமைத்து மக்கள் ரசிக்கும் படி படங்களை இயக்கி முன்னணியாக இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், சிம்பு, மாதவன், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்தும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் படிக்க: இறப்புக்கு முன் பவதாரிணி செய்த சேவை.. – அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்த வீடியோ..!
இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் சத்யராஜ் தற்போது, பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது, சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி இணைந்து நடித்துள்ள திரைப்படம் வெப்பன் வருகிற 23ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார் குறித்தும் அதில், அவர் தான் நிறைய தப்பான முடிவுகளை எடுத்திருக்கிறேன்.
மேலும் படிக்க: அம்மா போட்டோவுக்கு வந்த தப்பான கமெண்ட்.. அப்செட் ஆன பிக் பாஸ் பிரபலத்தின் மகன்..!
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இரண்டு படங்களை நான் மிஸ் செய்துவிட்டேன். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். அந்த படம் வேண்டாம் என்று நான் ஒரு படம் நடித்தேன். நான் நடித்த படமோ வெறும் 2 வாரம் ஓடியது, அவருடைய படம் 25 வாரம் ஓடியது.. இப்படி இருந்தால் எப்படி நிம்மதியா தூங்க முடியுமா?.. அதுவரை என்னுடைய முடி நல்லா தான் இருந்துச்சு அதுக்கு அப்புறம் தான் கொட்டியது என்று சத்யராஜ் தமாசாக தெரிவித்துள்ளார்.