வில்லன் to ஹீரோ….கடைசியாக நயன்தாராவின் அப்பா வரை – சத்யராஜ் சேர்த்த சொத்து எத்தனை கோடி தெரியுமா?

Author: Rajesh
17 February 2024, 3:30 pm

80களின் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத நடிகராக சத்யராஜ் இருந்து வருகிறார். முதலில் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வந்த சத்யராஜ் அதன் பிறகு தான் நடிகராக மாறினார். இவரின் பள்ளிக்கால நண்பரான மணிவண்ணனுடன் சத்யராஜு இணைந்து பல படங்களில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அது மட்டுமல்லாமல் மணிவண்ணன் இயக்கிய பெரும் படங்களில் சத்யராஜ் நடித்து, இவர்களில் காம்பினேஷனில் நிறைய படங்கள் வெற்றியை கண்டுள்ளது.

sathyaraj-updatenews360

கதாநாயகன் வில்லன் குணசித்திர கதாபாத்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் சத்யராஜ் நடித்திருக்கிறார். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் பெரியாரின் தீவிர வெறியன் ஆகவும் இருந்திருக்கிறார். மேலும் தந்தை பெரியாராக நடித்த திரைப்படத்தில் ஊதியம் வாங்காமல் சத்யராஜ் அந்த படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சத்யராஜ் உடைய சினிமா கேரியரில் நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, ரிக்ஷா மாமா, வில்லாதி வில்லன், வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை போன்ற படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். இப்படி திரைத்துறையில் மதிப்புமிக்க ஒரு நடிகராக இருப்பவர் சத்யராஜ்.

Sathyaraj

இந்நிலையில் நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதாவது இவர் மொத்தம் ரூ. 80 கோடி சொத்து வைத்திருக்கிறார். 69 வயதிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் சத்யராஜ் அண்மையில் நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், அவர் சொந்தமாக பிரம்மாண்ட பங்களா, சொகுசு கார்கள் என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 273

    0

    0