தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் தியேட்டர் இது: பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய விஷயத்தை பகிர்ந்த சத்யராஜ்..!

Author: Rajesh
10 February 2023, 6:29 pm

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் என்றாலே மக்கள் மனதில் ஆழமாக பதியக்கூடிய அளவிற்கு அந்த கேரக்டர் கட்டாயம் மாறிவிடும். அதற்கு “கட்டப்பா” என்னும் பெயர் சான்றாகும். இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். கடலோர கவிதைகள் படத்தின் மூலம் சினிமா உலகில் நடிகராக அறிமுகமான இவர், இதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார்.

ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் பின்னர் முன்னணி நடிகராக நடித்து வந்த இவர், குணச்சித்திர கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், சத்யராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பலரும் அறியாத சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில் தான் சிறுவயதில் கல்லூரிக்கு கட்டடித்தது விட்டு சினிமா பார்க்க சென்ற அனுபவம் குறித்து பேசிய போது, ”தற்போது ‘டிலைட் தியேட்டர்’ என அழைக்கப்படும் திரையரங்கம் அப்போது ‘வெரைட்டி ஹால் தியேட்டர்’ என்று சொல்லப்படும். இந்த தியேட்டரின் உரிமையாளரான சாமிக்கண்ணு வினென்ட் என்னுடைய அம்மாவழி தாத்தாவின் நெருங்கிய நண்பர். என்னுடைய தாத்தா 1920களில் லண்டனில் தான் படித்தார்.

sathyaraj -updatenews360

நான் 10 வயதில் இருந்து அந்த தியேட்டருக்கு சென்று வருகிறேன். நான் முதன்முதலில் அங்கு பார்த்த படம் ”பெரிய இடத்துப் பெண்” என நினைக்கிறன். ஒருமுறை பொங்கல் பண்டிகையின் போது எம்.ஜி ஆர் நடித்த “மாட்டுக்கார வேலன்” என்ற திரைப்படம் வெளியாகியது. இது ஹிந்தியில் வெளியான “ஜிகிரி தோய்ஸ்த்” படத்தின் ரீமேக். வெரைட்டி தியேட்டரில் அவ்வப்போது ஹிந்தி படம் வெளியாவதுண்டு. அப்படித்தான் “மாட்டுக்கார வேலன்” வெளியாவதர்க்கு முன்னரே “ஜிகிரி தோஸ்த்” திரைப்படம் வெளியானது.

அப்போது நானும் என்னுடை நண்பர்களும் இந்த படத்தை பார்த்துவிட்டுத்தான் “மாட்டுக்கார வேலன்” படத்தை எடுத்திருகின்றனர். எனவே இதனை பார்த்தே ஆகவேண்டும் என அனைவரும் அந்த படத்திற்கு சென்றோம். அவ்வளவு கூட்டம் வந்திருந்தது. அந்த படத்தில் நடித்த ஜிதேந்திராவை எம்.ஜி.ஆராகவே மக்கள் பார்த்து ரசித்தனர். ஒருவேளை அந்த காட்சியை ஜிதேந்திரா பார்த்திருந்தால் அடப்பாவிகளா கோவை மக்கள் எந்த அளவிற்கு என்னை கொண்டாடுகின்றனர் என்று அசந்து போயிருப்பார். அப்படி ஒரு அனுபவம் எனக்கு அந்த தியேட்டரில் கிடைத்தது.

பின்னர் “என்டர் தி ட்ராகன்” படம் அந்த தியேட்டரில் வெளியானது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த தியேட்டர் பக்கத்திலேயே கராத்தே பயிற்சி சொல்லிக்கொடுத்தனர். அதனை கற்றுக்கொள்ள கராத்தே செய்தேன், நான் கராத்தே பயிற்சியை மறந்தாலும் அந்த தியேட்டரை மறக்கவில்லை . நான் படிக்கும் காலகட்டத்தில் கல்லூரியை கட் அடித்துவிட்டு படம் பார்க்க வருவது சுலபம். ஒரு சைக்கிள் இருந்தால் போதும் சில நிமிடத்தில் தியேட்டருக்கு வந்து விடலாம” என பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் நடிகர் சத்யராஜ்.

  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 976

    12

    4