கமலின் ஃபிளாப் படத்தை வெளிப்படையாக ஓட்டிய சத்தியராஜ்: இப்படியா சொன்னாரு..?
Author: Rajesh20 March 2023, 8:36 pm
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் என்றாலே மக்கள் மனதில் ஆழமாக பதியக்கூடிய அளவிற்கு அந்த கேரக்டர் கட்டாயம் மாறிவிடும். அதற்கு “கட்டப்பா” என்னும் பெயர் சான்றாகும். இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்.
கடலோர கவிதைகள் படத்தின் மூலம் சினிமா உலகில் நடிகராக அறிமுகமான இவர், இதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் பின்னர் முன்னணி நடிகராக நடித்து வந்த இவர், குணச்சித்திர கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகிறார்.
பொதுவாகவே, படத்தில் மட்டுமல்லாது இவருக்கு இயற்கையாகவே குசும்புத்தனம் ஜாஸ்தி. அப்படி இவர் கமலின் பிளாப் படத்தை கிண்டலாக பேசியது குறித்து தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 1984ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் ஜப்பானில் கல்யாணராமன். இப்படம் ஜப்பானில் எடுக்கப்பட்டது. ஆனால், இப்படம் ஒரு தோல்விப்படமாகவே இருந்தது.
சமீபத்தில் ஒரு யுடியூப் சேனனில் இதுபற்றி பேசிய எஸ்.பி. முத்துராமன் ‘இப்படத்தில் கமல் இரட்டை வேடம் என்பதால் மிக்சர் கேமரா தேவைப்பட்டது. அந்த கேமரா ஜப்பானில் கிடைக்கும் என நினைத்து நாங்கள் ஜப்பானுக்கு சென்றுவிட்டோம். ஆனால், அந்த கேமரா அவுட் ஆஃப் டேட் ஆனதால் அங்கு கிடைக்கவில்லை. எனவே, கதையையே மாற்ற வேண்டியதாகிவிட்டது. படசுருளை 24 பெட்டிகளில் எடுத்து வந்தோம். படத்தை பார்த்த சத்தியராஜ் ‘24 பெட்டி எடுத்துட்டு வந்தீங்க. ஆனா, கதைப்பெட்டி மட்டும் மிஸ் ஆயிடுச்சி’ என என்னிடம் கிண்டலடித்தார்’ என எஸ்.பி.முத்துராமன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.