பிக்பாஸில் பிரபல விஜய் பட நடிகர்… அட இத யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

Author: Shree
29 September 2023, 4:08 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

7வது சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் நடிகர் அப்பாஸிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால், அவர் மறுத்துவிட்டதால் அவருக்கு பதில் நடிகர் ஷாம் பிக்பாஸ் வீட்டிற்கு வரப்போகிறாராம். இவர் கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தது குறிப்பிடதக்கது. அதன் பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிக்பாஸிற்கு வர சம்மதித்திருக்கிறார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?