அந்த படத்துல என்ன மிரட்டுனாங்க.. வாயடைக்க வைத்த விஜயகாந்த்: சியாம் சொன்ன ஷாக்கிங் சம்பவம்..!

2001ம் ஆண்டு 12B படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சியாம். இதனைத் தொடர்ந்து, இவர் கதாநாயகனாக நடித்து வெளியான லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே போன்ற திரைப்படங்கள் இவரை பிரபலம் செய்தது. இவரது துறு துறு நடிப்பு, வசீகர முகம் போன்றவை இவரை அறிமுகமான புதிதிலேயே மக்கள் மனதில் இடம் பெற செய்தது.

சிம்ரன், ஜோதிகா, சினேகா என அடுத்தடுத்து முன்னணி நடிகைகளுடன் நடித்தார். தமிழ் திரைப்பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிய காரணத்தினால், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி சில நல்ல இடத்தை பெற்றார். மேலும், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது, வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்துள்ளார் சியாம். 2000ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தின் விஜய்க்கு நண்பராக சியாம்நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வாரிசு பட ரிலீஸிலிருந்து தொடர்ந்து பேட்டிகளில் பங்கேற்று வந்த சியாம், கேப்டன் விஜயகாந்த் தனக்கு செய்த உதவி குறித்து பேசியிருந்தார்.

அதில் அவர் கூறியதாவது, சியாம் தான் நடித்த படத்தின் தயாரிப்பாளர் சம்பளத்தில் இழுத்தடித்துக் கொண்டு இருந்தாராம். இதனால், சியாம் சம்பளத்தை சரியாக தந்தால் டப்பிங் பேசவருவேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த தயாரிப்பாளர் ஆட்களை அனுப்பி ஷியாமை மிரட்டியுள்ளார். தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தயாரிப்பாளரின் தொல்லை தாங்க முடியாமல் சியாம் அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திற்கு போன் செய்து விவரத்தை சொல்லியிருக்கிறார்.

உடனே விஜயகாந்த், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு போன் செய்து இனிமேல் சியாம் விஷயத்தில் இனி தலையிட கூடாது, இது சியாம் பிரச்சினை கிடையாது, நடிகர் சங்க பிரச்சினை என்று தனக்கே உரித்தான பாணியில் தயாரிப்பாளரை மிரட்டி வாயடைக்க வைத்து விட்டாராம். இந்த பிரச்சினையால் மனவிரக்தியில் இருந்த என்னை மீட்டதே கேப்டன் தான் என்று சியாம் கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மாணவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பாதிரியார்.. பள்ளி விடுதியில் நடந்த பயங்கரம்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…

28 minutes ago

வடிவேலுகிட்ட கோடி ரூபாய் கொடுத்தேன், ஆனால் அவரு? ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகர்…

புகார் மீது புகார்.. சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி…

2 hours ago

ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சு? ஓடிடிக்கு தயாரானது லால் சலாம்!

சுமாரான வரவேற்பு ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான…

3 hours ago

பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?

திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…

4 hours ago

காதலி முன் தாய் படுகொலை.. கண்ணிமைக்கும் நேரத்தில் காதலன் செய்த கொடூரம்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுராவாடா சுயம்கிருஷி நகரில் லட்சுமி (வயது 43). இவரது மகள் தீபிகா (வயது 20) டிகிரி…

5 hours ago

ம****ரை கூட புடுங்க முடியாது.. நாறிப்போயிடுவீங்க : அமைச்சர் முன்னிலையில் சர்ச்சை பேச்சு!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு…

5 hours ago

This website uses cookies.