செம க்யூட்டு.. இது தான் அட்லீ மகனா? அள்ளி கொஞ்சிய ஷாருக்கான்.. ட்ரெண்டாகும் போட்டோ..!

Author: Rajesh
5 February 2023, 12:00 pm

ஒரு சில படங்கள் இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறி பிரபலம் அடைந்தவர் அட்லீ. இவர் தென்னிந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் அவர்களின் அசிஸ்டென்ட் ஆக எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். தனது முதல் படமான ராஜா ராணி படத்தில் ஆரியா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் உள்ளிட்ட பெரிய பிரபலங்களை வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

shahrukh khan - updatenews360

இதனை தொடர்ந்து, விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து 3 படங்களை விஜய் அவர்களுக்கு வெற்றி படங்களாக அமைத்து தந்தார். அதன்படி தற்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் படத்தை இயக்க பாலிவுட் பறந்து விட்டார் அட்லீ. இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

atlee priya - updatenews360

இயக்குனர் அட்லீ கடந்த 2014ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான பிரியாவை கரம்பிடித்தார். பிரியா குறும்படங்கள் மற்றும் வெள்ளித்திரையில் சிங்கம், நான் மஹான் அல்ல போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், அட்லீயின் மகனை ஷாரூக்கான் சந்தித்து இருப்பதாக சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 690

    13

    3