நான் அந்த தொழிலுக்கு சென்று இருப்பேன்: மனம் உருகிய பிரபல நடிகர்.. வைரலாகும் பதிவு..!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 5:32 pm

பாலிவுட்டில் முன்னணி நடிகராக சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். கடந்த சில தினங்களுக்கு முன், இவர் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் பதான். இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் காட்சியில் தீபிகா படுகோன் காவி நிற பிகினியை அணிந்து கவர்ச்சியாக நடித்திருந்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பதான் படத்தை திரையரங்கில் வெளியிடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடந்தது.

pthaan_Updatenews360

இருப்பினும், பதான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெளியான 5 நாட்களில் 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடந்தது. அப்போது நடிகர் ஷாருக்கான் பேசுகையில், ” நான் சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதற்கு முன்பு என் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தோல்வியை தழுவியது.

Shahrukh khan - Updatenews360

இதனால் நான் சினிமாவில் இருந்து விலகி வேறு தொழிலுக்கு சென்றுவிடலாம் என்று நினைத்தேன். மேலும் நான் ஹோட்டல் பிஸ்னஸ்காக சமையல் எல்லாம் கற்றுக்கொண்டேன். ஆனால் பதான் திரைப்படம் சினிமாவில் மீண்டும் ஒரு வாழ்கையை கொடுத்துள்ளது” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 462

    0

    1