தமிழ் சினிமாவில் டீனேஜ் வயதிலே ஹீரோவானவர் நடிகர் சித்தார்த். இவர் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு தமிழில் அருவம் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.அதை தொடர்ந்து இவர் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் ஹிந்தியிலும் ஒரு வெப் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 2003இல் மேக்னாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.
இதையடுத்து நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருகிறார். இருவரும் ‘மஹாசமுத்திரம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம் காதலாக உருவெடுத்தது. இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்கள் என செய்திகள் வெளியானது.
ஆனால், இதை வெளிப்படையாக கூறவில்லை. இந்நிலையில் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட சித்தார்த்திடம், உங்கள் வாழ்க்கையில் யாருடன் வாழ்க்கை முழுக்க பாடிக்கொண்டே இருக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, சித்தார்த் சிரித்து கொண்டு “அதிதி தேவ பவா உடன்” என்று கூறியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் கைதட்டி அரங்கத்தையே அதிரவைத்தனர். முதன் முறையாக அதிதி ராவை காதலிப்பதை சித்தார்த் மறைமுகமாக கூறியிருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரவு தூங்கச் சென்ற இளைஞர் அதிகாலையில் சடலமாக அறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மீரட் பகுதியில்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரகசிய தகவல் அடிப்படையில் போதை தடுப்பு போலீசார்…
தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி…
விஜய்க்கு ஃபத்வா… விஜய் கடந்த மாதம் சென்னை ஒய் எம் சி ஏ பள்ளிவாசலில் பல இஸ்லாமியர்களுடன் ரமலான் நோன்பில்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
This website uses cookies.