பத்து தல Audio Launchல் தளபதி விஜய்யை கண்டு எமோஷனலாகி கண்கலங்கிய சிம்பு: வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
19 March 2023, 4:32 pm

மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல. கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘முஃப்தி’. இப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் நரதனே மேற்கொண்டு வந்தார்.

பணிகள் தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழ் ரீமேக் தாமதமானதால் கன்னடத்தில் யாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க கமிட் ஆனார் நரதன். இதனால் ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு,படத்தை இயக்க ‘சில்லுனு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா கமிட் ஆனார்.

‘பத்து தல’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வருகிற மார்ச் 30ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வெளியாகி இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தளபதி பேசிய வீடியோவை கண்டு சிம்பு கண்கலங்கிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. வாரிசு படத்தில் சிம்பு அவர்கள் தீ தளபதி என்ற பாடலை பாடியிருந்தார். இதனால் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அவர்கள் சிம்புவுக்கு நன்றி தெரிவித்து பேசி இருந்தார். அந்த வீடியோவை தற்போது பத்து தல இசை வெளியீட்டு விழாவில் காட்டியிருக்கிறார்கள். அதைகண்டு சிம்பு கண்கலங்கிய வீடியோ தான் தற்போது தீயாய் பரவி வருகிறது.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!