சிம்புவை இயக்குநராக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் விரைவில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் அப்டேட் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ..!

Author: Vignesh
4 November 2022, 1:15 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. நடிப்பு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவராக திகழ்கின்றார் சிம்பு. இடையில் சில ஆண்டுகள் சர்ச்சைகளிலும், தோல்விகளிலும் சிக்கி வந்த சிம்பு கடந்தாண்டு வெளியான மாநாடு படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பினார்.

simbu-updatenews360-1-8

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானது. இப்படமும் ரசிங்கர்களின் அமோக வரவேற்பை பெற்று சிம்புவிற்கு வெற்றி படமாக அமைந்தது.

இதையடுத்து தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகின்றார் சிம்பு. இந்நிலையில் சிம்பு அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும், சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

simbu-Updatenews369-2

மேலும் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருவதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் துவங்கவுள்ளதாக பேசப்பட்டு வருகின்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டு சிம்பு மற்றும் த்ரிஷாவின் நடிப்பில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் காதல் காவியமாக காலம் கடந்தும் திகழ்கின்றது. எனவே இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் பல வருடங்களாக கேட்டு வருகின்றனர்.

Simbu - updatenews360

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன் கௌதம் மேனன் சிம்புவை வைத்து விண்ணை தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தை உருவாக்கப்போவதாக தகவல் வந்துள்ளது. இதனைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ