ரியல் ஜோடியாக ஆகவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் இன்னும் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் ஆக பேசப்படும் ஆன் ஸ்கீரின் ஜோடி என்றால் அது நயன்தாரா – சிம்பு தான். வல்லவன் படத்தில் இணைந்து நடித்தது முதலே இவர்களைப் பற்றி பல கிசுகிசுக்கள் வேகமாக பரவி வந்தன.
அதை நிரூபிக்கும் வகையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களுடன், இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. அதை உண்மை என்கிற விதத்தில் பல மேடைகள் மற்றும் பேட்டிகளில் மறைமுகமாக சிம்பு பேசியிருந்தார். அப்படி வல்லவன் படத்திற்கு பிறகு, மீண்டும் சிம்புவும் நயனும் இணைந்த திரைப்படம் ‘இது நம்ம ஆளு’.
பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இத்திரைப்படம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான பி.எல்.தேனப்பன் ஒரு பேட்டியில் இவர்கள் ஷூட்டிங்கில் செய்த காரியம் குறித்து நீண்ட நாள் ரகசியத்தை கூறியுள்ளார். இது நம்ம ஆளு படப்பிடிப்பின் போது நயன்தாரா சில சேட்டைகளை செய்வாராம்.
பொதுவாக பி.எல்.தேனப்பன் தனது போனை யாரிடமும் கொடுக்க மாட்டாராம். ஆனால் நயன்தாரா மிகவும் நெருக்கமானவர் என்பதால் ஒரு நாள் இரவு நயன்தாரா அவரது போனை வாங்கியிருக்கிறார். அவரும் எதார்த்தமாக போனை கொடுத்திருக்கிறார். அப்போது, நயனும் சிம்புவும் அந்த போனில் இருந்து நடிகை கோபிகாவுக்கு ‘ஐ லவ் யூ’ என மெசேஜ் செய்துள்ளனர்.
அந்த குறுஞ்செய்தியை பின்னர் அழித்தும் விட்டனர். மறு நாள் கோபிகா பி.எல்.தேனப்பனிடம் ‘ஏன் சார் அப்படி ஒரு மெசேஜ் அனுப்புனீங்க?’ என கேட்டுள்ளார். அதற்கு அவர் சத்தியமாக நான் இல்லை என்று சொல்லிவிட்டு யோசிக்கவே, அப்போது தான் சிம்புவும் நயனும் சேர்ந்து தன் போனில் இப்படி ஒரு காரியத்தை செய்ததை தெரிந்து கொண்டாராம். நயன் அடிக்கடி இந்த மாதிரி சேட்டைகள் எல்லாம் செய்வார் எனவும் பி.எல்.தேனப்பன் கூறியுள்ளார்.
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
நிதியைக் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, வாங்க வேண்டியது இவர்களின் உரிமை என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.…
குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி…
This website uses cookies.