ஜோதிகாவை உருகி உருகி காதலித்த வாரிசு நடிகர்..- நெருங்க விடாமல் பார்த்து கொண்ட சூர்யா..!

Author: Vignesh
13 March 2023, 10:54 am

நடிகர் சிலம்பரசன் பல காதல்களை தாண்டி தற்போது வரை சிங்கிளாகவே இருந்து வருகிறார். இவர் நயன்தாராவிலிருந்து ஹன்சிகா வரை காதலித்து வந்திருந்தாலும், திருமணம் என்ற சம்பவம் மட்டும் இன்று வரை இவருக்கு எட்டாத கனியாகவே உள்ளது.

Simbu - updatenews360

இந்நிலையில் நடிகர் சிம்பு, நடிகர் சூர்யாவின் மனைவியும், முன்னணி கதாநாயகியுமான ஜோதிகாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

surya jyothika - updatenews360

இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

திருமணத்திற்கு முன்பும் சரி அதன் பின்பும் சரி ஜோதிகாவின் படங்களில் சூர்யா தலையிட்டு நடிகர் நடிகைகள் குறித்த விவகாரம், கதை, வசனம் என அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே க்ரீன் சிக்னல் கொடுப்பாராம்.

surya jyothika - updatenews360

இதனிடையே, ஜோதிகாவோ நடிகர் சூர்யாவை காதலித்து வந்த சமயத்தில், ஜோதிகா எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ஜோதிகாவை பற்றியே புகழாரம் பாடி வந்தார். அந்த சமயத்தில் தான் சிம்பு தெளிவாக காயை நகர்த்தி சிம்பு இயக்கிய மன்மதன் படத்தில் ஜோதிகாவை நடிக்க வைத்தார். ஆனால் சிம்புவுடன் படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க சூர்யாவுக்கு பிடிக்கவில்லை என்பதால், இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த நாள் முதல் முடியும் நாள் வரை ஜோதிகாவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சேர்ந்து சென்றுள்ளார்.

surya jyothika-updatenews360

இதனிடையே, ஷூட்டிங் நடந்த அனைத்து நாட்களிலும் சூர்யா அங்கேயே இருந்து ஜோதிகாவுடன் சிம்புவை நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால், அப்செட் ஆன சிம்பு வல்லவன் படத்தில் நயன்தாராவை காதலித்துள்ளார். இதனிடையே, முதன் முதலில் நடிகர் சிம்பு காதலித்த பெண் ஜோதிகா என்பது சில பேருக்கு தெரியாத ஒன்றாக தான் உள்ளது.

 jyothika-updatenews360
  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 2711

    45

    33