மெகா ஹிட் படத்தை தவறவிட்ட சிம்பு… நடிச்சியிருந்தால் விஷால் அட்ரஸே இல்லாமல் போயிருப்பார்..!
Author: Vignesh1 February 2024, 1:15 pm
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். 40 வயது ஆகியும் நடிகர் சிம்பு திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். சினிமாவில் நுழைந்து நல்ல நல்ல படங்கள் நடித்துவந்த இவர் இடையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், சரியாக படங்கள் நடிக்காமல் இருந்தார்.
இப்போது, தான் மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். பல காதல் கிசுகிசுகளில் தொடர்ந்து சிக்கி வரும் தமிழ் நடிகர் என்றால் சிம்புவை சொல்லலாம். படங்களை ஒரு இடைவேளைக்கு பிறகு திரும்பி அவர் தற்போது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்திற்காக தயாராகி வருகிறார்.
இந்நிலையில், டி ராஜேந்திரனின் இரண்டாம் மகன் குறளரசன் நபீலா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. ஏற்கனவே, தங்கைக்கு குழந்தை பிறந்து மாமா அந்தஸ்தை பெற்ற சிம்பு தற்போது, பெரியப்பா அந்தஸ்தையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நயன்தாராவுக்கு திருமணம் என்று அடிக்கடி வதந்தி பரவியதோ அதேபோன்றுதான் தற்போது சிம்புவுக்கும் நடக்கிறது. அதனால் சிம்புவுக்கு நயன்தாரா ராசி என்கிறார்கள் சமூகவாசிகள் ஆனால் நயன்தாரா ஒரு வழியாக திருமணம் செய்து செட்டிலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சிம்பு இன்னும் முரட்டு சிங்கிளாகவே இருந்து வருகிறார் என செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தற்போது ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சிம்பு நடிக்க உள்ளார். இதனிடையே, சிம்புவின் திரைப்பயணத்தில் மிஸ் செய்த ஒரு படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, மாயாண்டி குடும்பத்தார் படத்தில் கடைசி மகனாக நடித்தவர் தருண் கோபி இவர் இயக்குனரும் கூட, முதன்முதலில் இவர் இயக்கிய திரைப்படம் திமிரு.
இதில் விஷால், ரீமாசென் போன்றவர்கள் நடிக்க மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆனால், இந்த படத்தில் நடிக்க வைக்க சிம்புவைத்தான் அவர் முதலில் அணுகினாராம். சிம்புவிற்கு கதை மிகவும் பிடித்து இருந்ததாம். தனது, அம்மாவிடமும் சிம்பு கதையை கூறி இருக்கிறார். ஆனால், சிம்புவின் அம்மா ஒரு பெண் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படுவது போல் தெரிகிறது எனக் கூற சிம்பு இந்த படத்தை மிஸ் செய்து விட்டாராம்.
அதுமட்டுமல்லாமல் விஷாலின் திறப்பயணத்தில் திமிரு படம் மிகப்பெரிய திருப்பு முறையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது இதனை பார்த்த ரசிகர்கள் செம்பு மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் விஷால் அட்ரஸ் இல்லாமல் போயிருப்பார் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.