புட்டி பால் குடிக்கும் போதிலிருந்து நடிக்கும் சிம்பு.. 41 ஆண்டு சினிமா வாழ்க்கையில் சேர்த்த சொத்து மதிப்பு..!

Author: Vignesh
3 February 2024, 11:17 am

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். இவர் 1 வயதில் இருந்து நடிக்க துவங்கி, நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடகர் போன்ற பல விஷயங்களை செய்து வருகிறார். தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை. படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான சிம்பு தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்திருந்தார். குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் லிஸ்டில் இவர் பெயரும் இணைந்து விட்டது. சிம்பு இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பல பரிமாணங்களிலும் தனது வெற்றியை நிலைநாட்டிய ஒருவர் என்று சொல்லலாம்.

Simbu - updatenews360

இவர் நடிப்பில் கடைசியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. மேலும், தன்னுடைய 50வது படத்தை அவரே இயக்க நடிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து, அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின், படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, 41 வயது ஆகியும் நடிகர் சிம்பு திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். சினிமாவில் நுழைந்து நல்ல நல்ல படங்கள் நடித்துவந்த இவர் இடையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், சரியாக படங்கள் நடிக்காமல் இருந்தார்.

actor-simbu 1

இப்போது, தான் மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். சமீப காலமாக அதிகபட்சமாக சிம்பு புதிய படங்களுக்கு 20 கோடி வரை சம்பளமாக வாங்கி வருவதாகவும், ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனை தொடர்ந்து தற்போது, இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, பிறந்தது முதல் தற்போது வரை சினிமாவில் மூழ்கியுள்ள நடிகர் சிம்பு தனியாகவே 120 கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்திருப்பதாகவும், அதோடு, சொகுசு கார் பங்களா என ஏகப்பட்ட சொத்துக்கள் இவர் பெயரிலே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 302

    0

    0