பிக்பாஸில் கெத்தான என்ட்ரி.. பத்து தல படக்குழுவை சுத்தலில் விட போகும் சிம்பு..!
Author: Rajesh27 February 2022, 5:32 pm
சிம்புவின் மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவருடைய அடுத்த படமாக வெந்து தணிந்த காடு மற்றும் பத்து தல போன்ற இரண்டு படங்களையும் சிம்புவின் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படம் கன்னடத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘மஃப்டி’ திரைப்படத்தின் ரீமேக்காகும். பத்து தல திரைப்படத்தை வித்தியாசமான கோலத்தில் படைக்க முனைப்புடன் அந்த படக்குழுவினர் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சிம்பு திடீரென்று பிக்பாஸில் என்ட்ரி கொடுத்திருப்பது பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பத்து தல படத்திற்கு கொஞ்சம் தாடி வளர்க்க வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் சிம்புவுக்கு கொஞ்ச நாள் கால அவகாசம் கொடுத்திருக்கும் இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விரைந்திருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி வெந்து தணிந்தது காடு படத்திற்காக இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு மீதமிருக்கும் நிலையில்இ சிம்பு எடுத்திருக்கும் இந்த முடிவு இந்த இரண்டு படங்களையும் கடுமையாக பாதிக்கப் போகிறது.
ஏற்கனவே படப்பிடிப்புக்கு தாமதமாகவே வரும் சிம்புவை பிக்பாஸில் கமிட் ஆன பிற, மீண்டும் இந்த படப்பிடிப்புத் தளத்திற்கு வரவைக்க என்ன பாடு பட போகிறோமோ என படக்குழுவினர் புலம்பி வருகின்றனராம்.