ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல? சிம்புவின் Thug ரிப்ளை – தொகுப்பாளர் கப்சிப்!

Author: Rajesh
2 February 2024, 2:27 pm

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை. படத்தின் மூலமாக ஹீரோவாக அதிகமான சிம்பு தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்திருந்தார். குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் லிஸ்டில் இவர் பெயரும் இணைந்து விட்டது. சிம்பு இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பல பரிமாணங்களிலும் தனது வெற்றியை நிலைநாட்டிய ஒருவர் என்று சொல்லலாம்.

actor-simbu 1

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, 40 வயது ஆகியும் நடிகர் சிம்பு திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். சினிமாவில் நுழைந்து நல்ல நல்ல படங்கள் நடித்துவந்த இவர் இடையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், சரியாக படங்கள் நடிக்காமல் இருந்தார். இப்போது, தான் மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சிம்புவின் திருமணம் குறித்த பேச்சுக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்திய பேட்டியில் கலந்துக்கொண்ட சிம்புவிடம் இது குறித்து கேட்டதற்கு, ” சில பேரு 50 , 60 வயசிலே செத்துடுறாங்க… சில கிழவனுங்க மட்டும் உயிரோடு இருக்காங்க. எல்லாரும் போய் சேர்ந்துட்டாங்க நீ ஏன் இன்னும் போகலன்னு கேட்பியா?அவங்கள பார்த்து நீ ஏன் இன்னும் உயோரோடு இருக்குறன்னு கேட்குறோமா? இல்ல தானே? என்ன மட்டும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலன்னு கேட்குற? ஏண்டா டேய்! அவன் அவனுக்கு எப்போ டைம் வருதோ அப்போ தான் போய் சேரமுடியும்? அப்படித்தான் எப்போ டைம் வருதோ அப்போதான் கல்யாணம் பண்ணமுடியும். வாய மூடிட்டு வேற கேள்வி கேட்பியா? என வேற மாறி ரிப்ளை கொடுத்தார் சிம்பு. தொகுப்பாளர் கப் சிப்னு அடங்கிப்போய்விட்டார்.

https://www.youtube.com/shorts/zShhW-F3iOQ
  • Sivakarthikeyan fan interaction viral video தீவிர ரசிகைக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சர்ப்ரைஸ்…என்னன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆவீங்க ..!
  • Views: - 417

    0

    0