கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக கயடு லோஹர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில், ராதிகா சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் திருச்செந்தூர் சென்னையில் செட்டுகள் அமைத்து சில முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தினை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ‘கேஜிஎஃப் 2’இ ‘பீஸ்ட்’ ஆகிய படங்கள் ஏப்ரலில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்இ தற்போது இந்த போட்டியில் ‘வெந்து தணிந்தது காடு’ படமும் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.