தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார். ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார்.
மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!
என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார். அதன் பின்னர், ரஜினி, கமல், அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான கிசுகிசுகளும், சர்ச்சைகளும் வந்த வண்ணம் உள்ளது. அதையும் தாண்டி அவர் தொடர்ந்து பெரிய நடிகர் என்ற அந்தஸ்தில் தான் இருந்து வருகிறார். வடிவேலு உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் உடன் நடித்திருந்தார்.
மேலும் படிக்க: ரீலா… ரியலா?.. நடு ரோட்டில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த நிவேதா பெத்துராஜ்.. வெளியான உண்மை..!
சமீப காலமாக நடிகர் வடிவேலுவுடன் நடித்த துணை நடிகர்கள் நேர்காணலில் பங்கேற்று வடிவேலு குறித்த சில விமர்சனங்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், அவருடன் பல படங்களின் நடித்த சிங்கமுத்து வடிவேலு குறித்து கூறுகையில், திரைத்துறையில் எல்லோருக்கும் தெரிகிறதை விட என்னை விட வடிவேலுவை தெரிந்தவன் யாரு, நான் அவரை பத்தி கால்வாசி கூட சொல்லலியே இன்னும் சொன்னா துபாய் போன்ற நாடுகளாக இருந்தால், கல் எடுத்து அடிச்சு கொன்றுவாங்க, அப்படி எல்லாம் அவர் தப்பு பண்ணுவாரு வடிவேலு ஆரம்பத்தில் பண்ண கூத்தெல்லாம், எனக்கு மட்டும்தான் தெரியும். உலகத்திலேயே, எல்லா நடிகரும் கெட்டுப் போய்டனும் தான் மட்டும் நடிக்கணும் அப்படிங்கற நினைப்பு வடிவேலுவுக்கு இருக்கு, வடிவேலு, பொய் சொல்லி ஒரு ஆளைப்பற்றி வதந்தியை கிளப்பி விட்டுருவார் என்று சிங்கமுத்து வடிவேலு குறித்த விளாசியுள்ளார். மேலும், வடிவேலுக்கு நாக்குல சனி என்றும் தெரிவித்துள்ளார்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
This website uses cookies.