அஜித், விஜய் -க்கு இணையான ரசிகர்களின் கூட்டத்தை உருவாக்கி வரும் பிரபல நடிகர்.. வீடியோ வைரல்..!
Author: Rajesh18 March 2022, 4:52 pm
சின்னத்திரையில் திரையுலக பயணத்தை தொடங்கி, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் டாக்டர். இந்த பட வெற்றியைத் தொடர்ந்து, டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. இது தவிர, கமலின் ராஜ்கமல் ப்ரொடக்ஷனில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இதனிடையே நடிப்பதை தாண்டி பாடல்கள் எழுதுவது, படங்கள் தயாரிப்பது, பாடுவது என பல திறமைகள் கொண்டவராகவும் திகழ்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தினை தயாரித்தார். நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் ‘எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சி’ என்ற பாடலை பலரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து, டாக்டர் படத்தில் செல்லமா பாடலையும் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்திலும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல்கள் எழுதியுள்ளார்.
இதனால் அவருக்கான தனியாக ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவாகி வருகிறது. இந்த நிலையில், தான் தற்போது இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ளுமு 20 படத்தில் நடித்து வருகிறார், அந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்காலில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
அதில் சிவகார்த்திகேயனை காண மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே அங்கு திரண்டுள்ளது. மாடியில் நின்று ரசிகர்களுக்கு கை அசைப்பது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் பரப்பபட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது அதிக ரசிகர்கள் இருப்பது அஜித், விஜய் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனும் கூடிய சீக்கிரத்தில் வந்து விடுவார் என்பது இந்த கூட்டத்தினை பார்க்கும் தெரிவதாக சினிமா துறையினர் தெரிவிக்கின்றனர்.