பிரியங்கா மோகன் வேண்டாம்.. அவங்க ஓகே..! பிரபல நடிகைக்கு வலை விரிக்கும் சிவகார்த்திகேயன்..!
Author: Vignesh15 March 2023, 4:45 pm
சிவகார்த்திகேயன் பெருதும் நம்பிய பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்து மூலையில் உட்காரவைத்துள்ளது. அதனால், அதிலிருந்து மீண்டு வருவதற்காக சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் கமல் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தை குறித்து சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தற்போது, மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து தான் கமல்ஹாசன் நடத்தி வரும் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இரண்டு முறை சிவாவுடன் நடித்து 100 கோடி அள்ளிய டாக்டர், டான் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், பிரியங்கா மோகனை வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கும் நடியையை பற்றி இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு துல்கர் சல்மான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் princess ஆக நடித்த நடிகை மிருணாள் தாகூர் தான் நடிக்க இருப்பதாகவும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இதனால், இந்த படத்தில் மிருணாள் தாகூர் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.