தனுஷ்க்கு திருப்பி கொடுத்த SK.. மீண்டும் இணையும் கூட்டணி : வெளியான மாஸ் அப்டேட்!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2024, 1:21 pm

முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சிவகார்த்திகயேன் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

தீபாவளிக்கு திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் மெகா ஹிட் அடித்துள்ளது. விஜய் இடத்தை எஸ்கே தான் பிடிப்பார் என அவரது ரசிகர்கள் மார்தட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்க: விஜய்யை பார்த்ததும் சுற்றி வளைத்த கூட்டம்… ஷாக் கொடுத்த பெண் .. வைரலாகும் வீடியோ!

அமரன் திரைப்படம் கொடுத்த வெற்றியால் எஸ்கே செம ஹேப்பியில் உள்ள நிலையில், அடுத்த படத்திற்கான அப்டேட்டை அவரே கூறியுள்ளார்,.

அமரன் பட வெற்றியை தொடர்ந்து ஹிந்தி ப்ரோமோஷனில் படக்குழு பங்கேற்றது. இதில் தொகுப்பாளர் டான் படத்தை பற்றி கேள்வி எழுப்ப, சிவகார்த்திகேயன் சொன்ன பதிலில், ஏஆர் முருகதாஸ் உடனான படத்தை முடித்த பின், அடுத்த படம் மீண்டும் சிபி சக்கர்வர்த்தியுடன் இணைய உள்ளதாக கூறினார்.

டான் படம் கடந்த மே 2022ல் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை கேட்ட எஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் பட அப்டேட்டுகளுக்காக காத்துள்ளனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 177

    0

    0