பொண்ணு அம்மா மாதிரி.. பையன் அப்படியே அப்பா ஜாடை தான்.. வைரலாகும் SK மகன் லேட்டஸ்ட் பிக்..!
Author: Udayachandran RadhaKrishnan16 January 2023, 10:00 am
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.
பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.
தற்போது, அயலான், மாவீரன் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தனது கடின உழைப்பின் மூலம் இந்த இடத்திற்கு வந்த இவர், 2010ம் ஆண்டு தனது உறவுக்கார பெண்ணான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 மகளும் மகனும் உள்ளனர். மகள் ஆராதனா, வாயாடி பெத்த புள்ள பாடல் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயம். கடந்தாண்டு, இவர்களுக்கு மகன் பிறந்தார். இவருக்கு தனது தந்தை பெயரை சேர்த்து குகன் தாஸ் என வைத்தார்.
இந்நிலையில், பொங்கல் திருநாளான நேற்று, சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் மனைவி, மகள், மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து பதிவிட்டுள்ளார். இதில் தனது மகன் குகன் தாஸிற்கு வேட்டி அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் சிவகார்திகேயனின் இந்த பொங்கல் ஸ்பெஷல் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.