SK21: இணையத்தில் லீக்கான காட்சிகள்.. அதிலும், அந்த முக்கிய சீனே வந்துடுச்சே..!
Author: Vignesh6 December 2023, 11:30 am
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டான், பிரின்ஸ், மாவீரன் என அடுத்தடுத்து வெற்றி படங்கள் வெளியாகி இருந்தன.
அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாக தயாராக உள்ளது. ஆனால், படம் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 21வது படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படம் தற்போது, இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள நிலையில், படத்தின் பெயர் அப்டேட் வெளியாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில், படத்தின் முக்கிய காட்சி லீக் ஆகி உள்ளது. அதாவது, சாய்பல்லவி மற்றும் அவரது குழந்தை சிவகார்த்திகேயனுக்காக காத்திருப்பதாக அமைக்கப்பட்டிருந்த காட்சிகள் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த காட்சியை பகிர வேண்டாம் என்று சமூக வலைதளத்தில் கேட்டு வருகின்றனர்.