அவ ஒரு பொம்பள… ஒருமையில் ஜோதிகாவை பற்றி அப்படி ஒரு வார்த்தை சொன்ன சிவகுமார்!

Author: Shree
6 July 2023, 8:29 am

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சிவகுமாருக்கு தன் மகன் ஒரு நடிகையை திருமணம் செய்வதில் விருப்பமே இல்லையாம். தன் ஜாதியில் பெண் எடுத்து திருமணம் செய்யவேண்டும் என எண்ணியதாகவும் அது நடக்காததால் மிகவும் வருத்தப்பட்டதாக சிவகுமாரே பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜோதிகாவுடன் காற்றின் மொழி திரைப்படத்தில் நடித்தது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் வித்தார்த், ” நான் முதலில் ஜோதிகா மேம் உடன் நடிக்க பயந்தேன். அந்த சமயத்தில் சிவகுமார் சார் தான் என்னிடம் வந்து, “அவ (ஜோதிகா) ஒரு பொம்பள சிவாஜிடா, அவ பயங்கரம்-டா” என்று சொன்னார். பின்னர் நடிக்க ஆரம்பித்த போது ஜோதிகா… தான் ஒரு பெரிய நடிகை என்ற எந்தவொரு தலைக்கனமும் இல்லாமல் நன்றாக பழகியதாக கூறியிருக்கிறார்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!