இதுக்கெல்லாம் சினிமாவை விட்டு விலகலாமா…கோபத்தில் நடிகர் சிவகுமார் எடுத்த முடிவு..

Author: Selvan
16 November 2024, 6:48 pm

நடிகர் சிவகுமார் சினிமா வாழ்க்கை

தமிழ் சினிமாவில் சிவாஜி,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா,கே ஆர் விஜயா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து சினிமாவில் தன்னுடைய உச்சத்தை தொட்டவர் நடிகர் சிவ குமார்.

பல ஹிட் படங்களை கொடுத்தவர்.1979 ஆம் ஆண்டு வெளிவந்த “ரோசாப்பூ ரவிக்கைகாரி”,1980 ஆம் ஆண்டு வெளிவந்த “வண்டிச்சக்கரம்” போன்ற படங்களுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வாங்கினார்.இப்படி பல விருதுகளுக்கு சொந்தக்காரர் நடிகர் சிவ குமார்.

actor siva kumar hit movie in rosappu ravikkai kari

விலகியது ஏன்

இவர் திடிரென்று சினிமாவை விட்டு விலகினார்.அதற்கான விளக்கத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருப்பார். அதில் 2005ல் ஒரு டிவி சீரியலில் நடித்து வந்த நான் ஒரு முக்கியமான எமோஷலான காட்சியில் நடித்திட்டு இருந்த போது அந்த செட்டுக்குள்ள 18 வயசு கூட இல்லாத ஒரு சின்ன பொண்ணு போன்ல யாரு கூடயோ பேசிக்கிட்டு ஹஹஹ…ஹஹஹன்னு சிரிச்சிட்டு இருந்துச்சு.

sivakumar left tamil industry

எம்மா என்னம்மா நடிச்சிக்கிட்டு இருக்கும்போது ஏன் கத்திக்கிட்டு இருக்கேன்னு நான் கோபமாக கேட்டேன்.அதற்கு அந்த பொண்ணு ‘ஏன் சார் இவ்ளோ கோபப்படுறீங்க இதெல்லாம் ஒரு சாதாரண விஷயம்.நீங்க நடிக்கிற பர்பார்மன்ஸ் கம்மியா டப்பிங்ல பேசி கரெக்ட் பண்ண வேண்டியது தானே. இதுக்கெல்லாம் ஏன் சார் டென்ஷன் ஆகறீங்கனு அந்தப் பொண்ணு என்னிடம் எதிர்த்து கேட்டுச்சு.

இதையும் படியுங்க: அடுத்த மாதமே ரிலீஸ் ஆகும் சூப்பர்ஸ்டார் ரஜினி படம்..உற்சாகத்தில் ரசிகர்கள்..!

அது செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது.அப்போ முடிவு பண்ணேன்.நான் வணங்குற தொழில் சினிமா,எனக்கு பேரு, புகழ், சோறு கொடுத்தது இது தான்.அதனால இந்த தொழில்ல நேர்மை, நாணயம், கௌரவமாக நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்.இப்படிப்பட்ட ஆட்கள் எல்லாம் பேசுற நிலைமை வரும்போது நான் விலகுறது தான் நல்லது. அப்படி இல்லன்னா கொலை பண்ற சூழல் வந்துடும். நான் யாரையாவது கொலை பண்ணிடுவேன் என்று அந்த பேட்டியில் கூறி இருப்பார்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 163

    1

    0