4வது குழந்தைக்கு நான் ரெடி..’ஆஸ்கார்’ கொடுக்க நீங்க ரெடியா..மேடையில் நடிகர் கல கல பேச்சு.!
Author: Selvan21 March 2025, 4:00 pm
ஆஸ்காருக்காக நான்காவது குழந்தை!
விக்ரம் நடித்த “வீர தீர சூரன்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்க: நான் செய்தது மிகப்பெரிய தவறு…வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்.!
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம்,எஸ்.ஜே.சூர்யா,மலையாள நடிகர் சூரஜ், இயக்குநர் அருண்குமார்,இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது மேடை ஏறிய மலையாள நடிகர் சூரஜ் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்து,அங்கு இருந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தார்.பல மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர் “வீர தீர சூரன்” படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
அவர் பேசியதாவது”எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது, முதன்முறையாக கேரள மாநில அரசு விருது கிடைத்தது.இரண்டாவது குழந்தை பிறந்தபோது,சிறந்த நடிகருக்கான இரண்டாவது மாநில விருது கிடைத்தது.மூன்றாவது குழந்தை பிறந்தபோது,தேசிய விருதும் கிடைத்தது.அடுத்து ஆஸ்கார் விருது வாங்க வேண்டுமானால், நான்காவது குழந்தையும் பிறக்க வேண்டியது தான்” என்று நகைச்சுவையாக கூறினார்.
அவரது இந்த கலகலப்பான பேச்சு அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது,மேலும் அவர் எஸ் ஜே சூர்யா மாதிரி பேசி அசத்தினார்.